CRIME
“அடச்சீ..! வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர்..”மகளின் கண்ணீரைப் பார்த்து தாய் எடுத்த அதிரடி முடிவு..!!
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. 8 மற்றும் 10 வயதான மாணவிகள் இருவரிடம் மைனுல்லா சித்திக் என்ற ஆசிரியர் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நடந்த கொடூர சம்பவத்தைக் குறித்துத் தனது தாயிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். தாய் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் மைனுல்லா சித்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
