“காதலி மோகம் பிடித்த கல்நெஞ்சக்கார மகன்” இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்ட சொந்தத் தந்தை… செங்கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“காதலி மோகம் பிடித்த கல்நெஞ்சக்கார மகன்” இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்ட சொந்தத் தந்தை… செங்கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!!

Published

on

பீகார் மாநிலம் கயாவில், திருமணமான பெண்ணுடனான கள்ளக்காதல் மற்றும் நில தகராறு காரணமாக, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சொந்தத் தந்தையை மகனே கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மகனின் பெயர் சந்தன் ராஜ் என்றும், அவர் தனது தந்தையான கிருஷ்ணா குப்தாவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தன் ராஜ் தன்னை விட 10 வயது மூத்த திருமணமான பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் தூண்டுதலால் தனக்குச் சொந்தமான நிலத்தை அவர் பெயருக்கு மாற்றித் தருமாறு தந்தையை வற்புறுத்தியுள்ளார். ஆனால், நோய்வாய்ப்பட்டிருந்த தந்தை நிலத்தைத் தர மறுத்து, அந்த சட்டவிரோத உறவிற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், செப்டம்பர் 24 அன்று தந்தையைக் கட்டை, செங்கல் மற்றும் கனமான கற்களால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலைப் புதரில் வீசிவிட்டுத் தலைமறைவானார்.

Advertisement

செப்டம்பர் 26 அன்று கண்டெடுக்கப்பட்ட உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், செல்போன் இருப்பிடம் மற்றும் அழைப்பு விவரங்களின் அடிப்படையில் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த மகனைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், இந்தச் சதித்திட்டத்திற்குப் பின்னணியில் இருந்து தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in