LATEST NEWS
ச்சீ.. பொம்மை போல மாறனும்.. டாக்டர் தடுத்தும் கேட்காமல் வீட்டிலேயே உதட்டுக்கு ‘ஃபில்லர்’ போட்டுக்கொண்ட விநோத பெண்..” வைரல் போட்டோவை பார்த்து மிரண்டுபோன நெட்டிசன்ஸ்..!!
அழகாகவும் இளமையாகவும் காட்சியளிப்பதற்காக மக்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்; ஆனால் சிலர் இதில் எல்லை கடந்து விடுகிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த சோஃபியா லிப்ஸ் என்பவர் “பிரிட்டனில் மிகப்பரிய உதடுகளைக் கொண்ட பெண்” என்று அழைக்கப்படுகிறார். அழகாகத் தெரிய வேண்டும் என்ற அவரது தீவிரமான ஆசையால், மருத்துவர்கள் அவரது உதடுகளில் மேலும் ‘ஃபில்லர்’ செலுத்த மறுத்தபோது, அவர் தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலேயே தானாகவே அறுவை சிகிச்சை/ஊசி போட்டுக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பொம்மை போலக் காட்சியளிப்பதில் சோஃபியாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. முன்னதாக தனது இயல்பான முகத்தைப் பார்ப்பதற்காக உதடுகளிலிருந்த ஃபில்லர்களை அவர் நீக்கியிருந்தார். ஆனால் அந்த தோற்றம் அவருக்குப் பிடிக்காததால், மீண்டும் பழைய நிலைக்கு மாற விழைந்தார். இதற்காக மருத்துவ மனைக்குச் சென்றபோது, அவரது உதடுகள் ஏற்கனவே மிகவும் இழுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஃபில்லர் செலுத்துவது அவரது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது எனக் கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சோஃபியா சுமார் 500 பவுண்டுகள் செலவிட்டு 6 வார ஆன்லைன் கோர்ஸ் ஒன்றைப் படித்து, பின்னர் கொரிய நிறுவனம் ஒன்றிலிருந்து ஆன்லைன் மூலமாக 20 ஃபில்லர் ஊசிகளை வரவழைத்து வீட்டிலேயே உதடுகளில் ஊசி போட்டுக்கொண்டார்.
வீட்டிலேயே இந்த ஊசியைச் செலுத்துவது உயிருக்கே ஆபத்தானது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்த போதிலும், சோஃபியா தான் எந்த மருத்துவரை விடவும் சிறப்பாகச் செய்ததாகக் கூறுகிறார். இதற்கு முன்பும் ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் தொற்று பரவி இவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார். இருப்பினும், மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் தனக்குக் கவலையில்லை என்றும், தான் ஒரு பூரணமான பொம்மை போலக் காட்சியளிக்கும் வரை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
