“என் கணவனை கண்ணெதிரே, போலீஸ் முன்னாடியே…” இரு மகன்களுடன் பா.ஜ.க பிரமுகர் செய்த கொடூர காரியம்.. வழக்கறிஞர் மனைவியின் பகீர் வீடியோ வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கணவனை கண்ணெதிரே, போலீஸ் முன்னாடியே…” இரு மகன்களுடன் பா.ஜ.க பிரமுகர் செய்த கொடூர காரியம்.. வழக்கறிஞர் மனைவியின் பகீர் வீடியோ வாக்குமூலம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், வழக்கறிஞர் சதீஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா என்பவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கியதுடன், அவரைப் பகல் நேரத்திலேயே சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துணிச்சலான கொலைச் சம்பவம் நிலத் தகராறு காரணமாக நடந்துள்ளது என்று வழக்கறிஞர் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பா.ஜ.க பிரமுகர் தேவேந்திர நாத் மிஸ்ரா மற்றும் அவரது இரு மகன்களே இந்தத் தாக்குதலை நடத்தி வழக்கறிஞரைப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட வழக்கறிஞரின் நிலத்தைக் கைப்பற்ற அந்தப் பா.ஜ.க பிரமுகர் முயன்றதாகவும், இது தொடர்பாக கடந்த ஒரு ஆண்டாக அவர்களுக்குள் தகராறு நீடித்து வந்ததாகவும் வழக்கறிஞரின் மனைவி வர்ஷா தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினரின் முன்னிலையிலேயே தனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி தங்களது மகளுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் நேரில் சந்தித்து இந்த நில விவகாரம் குறித்து இக்குடும்பத்தினர் மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in