CRIME
“அடிப்பாவி.. கணவனின் சடலத்திற்கு அருகே கிடந்த பாம்பு…” போலீஸாரை திசைதிருப்ப மனைவி போட்ட விசித்திர பிளான்.. ‘அந்த’ ஒரு விஷயத்தில் கோட்டைவிட்ட கள்ளக்காதல் ஜோடி.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ரவிதா என்ற பெண் தனது கணவர் அமித்தை அவரது கள்ளக்காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். பின்னர் காவல்துறையினரைத் திசை திருப்புவதற்காக, அமித்தின் சடலத்திற்கு அருகே ஒரு பாம்பை விட்டுச் சென்று, அவர் பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்பது போல நாடகமாடியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அங்கு விட்டுச் சென்ற பாம்பு மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்ட நச்சுப் பாம்பு அல்ல என்பது பின்னரே தெரியவந்தது.
ரவிதா மற்றும் அமர்ஜீத்தின் திருமணத்திற்குப் புறம்பான உறவு குறித்து அக்குடும்பத்தினர் ஏற்கனவே பலமுறை கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில், ரவிதாவும் அவரது கள்ளக்காதலனும் வீட்டிற்குள் ஒன்றாக இருந்ததை அமித்தின் தாய் நேரில் பார்த்துள்ளார். மறுநாள் காலையில் தனது கணவர் இறந்துவிட்டதாக ரவிதா கூச்சலிட்டபோது, சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம், அமித் பாம்பு கடித்து இறக்கவில்லை, அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
