LATEST NEWS
குஷியோ குஷி..! தீபாவளிக்கு வெடிக்கப் போகும் அடுத்த சர்ப்ரைஸ்..! 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ் ரெடி… TN அரசு முடிவு..!!
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் சூழலில், ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பை வழங்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களையும் இறுதி செய்த பிறகு, இது குறித்து முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, புதுச்சேரியில் ஏற்கனவே தீபாவளி தொகுப்பு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
