CRIME
“இது என்னடா புது கூத்து..” இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிட்ட பெண்.. வாயில் துளசி நீர் ஊற்றியபோது நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. வியக்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பெலாவா தாகிலி கிராமத்தில், உயிரிழந்ததாகக் கருதப்பட்டு இறுதிச்சடங்கிற்குத் தயார் செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீரென இருமிக்கொண்டு உயிர்த்தெழுந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. லலிதா தேவி என்ற அந்தப் பெண் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரது கணவர் சிவமுராத் யாதவ் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், லலிதா தேவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் லலிதா தேவியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து, இறுதிச்சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். இறுதி ஊர்வலத்திற்கு முன்னதாக, இறுதிச் சடங்கு விதிகளின்படி லலிதா தேவியின் வாயில் துளசி நீர் ஊற்ற முற்பட்டபோது, அவர் திடீரென இருமத் தொடங்கியுள்ளார். அவர் உயிருடன் இருப்பதை அறிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
