LATEST NEWS
‘ஐயோ கடவுளே.. ரப்பர் தோட்டத்தில் அலறியடித்த ஆசிரியர்..” மரண பயத்தில் மரத்தின் மேல் ஏறிய அவலம்.. கீழே காத்திருந்த ஆபத்து.. பதைபதைக்கும் வீடியோ..!!
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைக்கு அருகிலுள்ள வெள்ளாறடை என்ற ரப்பர் தோட்டப் பகுதியில், காட்டுப்பன்றியிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர் ஒருவர் மரத்தின் மீது ஏறி தஞ்சமடைந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர், ரப்பர் பால் எடுப்பதற்காகத் தோட்டத்திற்குச் சென்றபோது, திடீரென ஒரு பெரிய காட்டுப்பன்றி அவரைத் துரத்தத் தொடங்கியுள்ளது. இதனால் தனது உயிருக்குப் பயந்து அலறியடித்த அவர், அங்கிருந்த ஒரு மரத்தின் மீது வேகமாக ஏறித் தப்பித்துள்ளார்.
மரத்தில் ஏறிய ராதாகிருஷ்ணனால் காட்டுப்பன்றியின் பயம் காரணமாகவும், உயரத்தின் காரணமாகவும் கீழே இறங்க முடியாமல் நீண்ட நேரம் மரத்தின் மேலேயே தவித்து வந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த பரசாலை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரத்தில் சிக்கித் தவித்த ஆசிரியரை ஏணிகள் மற்றும் கயிறுகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். ரப்பர் தோட்டப் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
