அடச்சீ.. சொந்தச் மாமாவே செய்த அசிங்கம்..! துர்கா பூஜை பந்தலில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… திருவிழாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. சொந்தச் மாமாவே செய்த அசிங்கம்..! துர்கா பூஜை பந்தலில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… திருவிழாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஜபராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், துர்கா பூஜை பந்தலுக்குச் சென்ற 5 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். அப்போது, சிறுமி ஆற்றங்கரைப் புதர்களுக்குள் மதுபோதையில் இருந்த நபருடன் மீட்கப்பட்டார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்றும், முறைப்படி சிறுமிக்குச் மாமா உறவுமுறை கொண்டவர் என்றும் தாயார் தெரிவித்துள்ளார்.

Advertisement

காவல்துறை நகர் துணை கண்காணிப்பாளர் சம்யக் சௌத்ரி அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட குற்றவாளி சுராஜ் நிஷாத் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது கடும் மதுபோதையில் இருந்த அவர், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஆற்றங்கரை புதருக்குள் அழைத்துச் சென்று இக்கொடூரத்தைச் செய்துள்ளார். மேலும், கைதான நபர் மீது ஏற்கனவே இதேபோன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பதும், தற்போது அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in