LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்.. 20,000 லிட்டர் தண்ணீருடன் உடைந்த கண்ணாடி… அலறி அடித்து ஓடிய மக்கள்..! ஜலக்கன்னி’ ஷோவில் பயங்கர விபத்து! 4 குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள ஃபகீர்பூர் பகுதியின் காலித்பூர் கிராமத்தில் நடைபெற்ற தாதா மியா உர்ஸ் திருவிழாவின்போது ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. திருவிழாவிற்கு வந்திருந்த மக்களின் பொழுதுபோக்கிற்காக ‘ஜலக்கன்னி ஷோ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 20,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதைக் காண மக்களிடம் தலா 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்தத் தொட்டியின் கண்ணாடி உடைந்து, அதிலிருந்த தண்ணீரும் கண்ணாடித் துண்டுகளும் பார்வையாளர்கள் மீது பாய்ந்தன.
இந்த திடீர் விபட்டால் அங்கே இருந்த மக்களுக்கு தப்பிக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. தண்ணீரின் வேகமும் கண்ணாடித் துண்டுகளும் பட்டு நான்கு குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். இதனால் திருவிழாவில் பெரும் பதற்றமும் நெரிசலும் ஏற்பட்டது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் நாலாபுறமும் ஓடியதால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே அங்கிருந்தவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு முதலுதவிக்குப் பிறகு, கவலைக்கிடமான நிலையில் இருந்த இரண்டு குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். விபத்து நடந்தவுடன் ஷோவை ஏற்பாடு செய்தவர்களும் பராமரிப்பாளர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். தலைமறைவான ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொட்டியின் கண்ணாடி உடைவதற்கான உண்மையான காரணம் என்னவென்பதையும், பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள ஃபகீர்பூர் பகுதியின் காலித்பூர் கிராமத்தில் நடைபெற்ற தாதா மியா உர்ஸ் திருவிழாவின்போது ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. திருவிழாவிற்கு வந்திருந்த மக்களின் பொழுதுபோக்கிற்காக ‘ஜலக்கன்னி (Jalpari) ஷோ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 20,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதைக் காண மக்களிடம் தலா 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்தத் தொட்டியின் கண்ணாடி உடைந்து, அதிலிருந்த தண்ணீரும் கண்ணாடித் துண்டுகளும் பார்வையாளர்கள் மீது பாய்ந்தன.