“இறந்தவர்களின் முகத்தில் பதிந்த செருப்பு தடங்கள்…” 19 பேரின் உயிரைப் பறித்த கொல்கத்தா கூட்ட நெரிசலின் கொடூர பின்னணி.. விஐபி-க்களுக்கு பாதுகாப்பு, ஏழைகளுக்கு மரணமா..? – cinefeeds
Connect with us

CRIME

“இறந்தவர்களின் முகத்தில் பதிந்த செருப்பு தடங்கள்…” 19 பேரின் உயிரைப் பறித்த கொல்கத்தா கூட்ட நெரிசலின் கொடூர பின்னணி.. விஐபி-க்களுக்கு பாதுகாப்பு, ஏழைகளுக்கு மரணமா..?

Published

on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் சூர்யபாகன் துர்கா பூஜை பந்தலில் நேரிட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாசப்தமி திருவிழா கொண்டாட்டத்தின் போது திடீரெனப் பலத்த மழை பெய்ததால், பந்தலுக்கு வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டதால் இந்த கோரத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களைப் பார்த்த உறவினர்கள், நெஞ்சை உலுக்கும் பல கதைகளை கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர். அகர்பாராவைச் சேர்ந்த பிராஞ்சல் சர்க்கார் என்ற 13 வயது சிறுமியின் முகத்தில் கூட்ட நெரிசலில் மிதிபட்ட காலணிகளின் தழும்புகள் அப்படியே பதிந்திருந்ததாக அவளது உறவினர்கள் கதறியுள்ளனர். இதேபோல், டாடா புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த தனது ஒரே மகளை இழந்த தாய், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், 25 வயது இளைஞன் சோனு பால் என்பவனின் கண்ணெதிரேயே அவனது தாய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அம்மாவின் கையைத் தவறவிட்ட 7 வயது சிறுமி ஒருவர் தற்பொழுது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாள்.

Advertisement

சம்பவம் நடந்த சூர்யபாகன் பகுதிச் சாலைகள் மிகவும் குறுகலாகவும், போதிய வெளிச்சமின்றியும் இருந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களின் பாதுகாப்புப் பாதையைக் கவனிக்காமல், விஐபி நுழைவாயில் பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தியதாகக் கூறி பொதுமக்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விபத்து நேரிட்ட உடனே அவசர உதவிக்குக் கூட எவ்வித நிர்வாக வாகனமும் வராததால், உள்ளூர் மக்களே தங்களது சொந்த வாகனங்களில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த விபத்தினால் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in