நவராத்திரி சடங்கு கொடூரம்.. பிறந்த மறுநாளே இறந்த பச்சிளம் குழந்தை.. பெற்றோர் செய்த பகீர் காரியம்…. மயானத்தில் நடந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நவராத்திரி சடங்கு கொடூரம்.. பிறந்த மறுநாளே இறந்த பச்சிளம் குழந்தை.. பெற்றோர் செய்த பகீர் காரியம்…. மயானத்தில் நடந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், பிறந்த மறுநாளே உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை நவராத்திரி வழிபாட்டைக் காரணம் காட்டி பெற்றோரே தொட மறுத்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நவராத்திரி திருவிழா காலங்களில் பிரசவித்த தாயையோ அல்லது பச்சிளம் குழந்தையையோ தொடுவதற்கும், அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கும் தங்கள் மத பாரம்பரியத்தில் தடை இருப்பதாகக் கூறி அக்குடும்பத்தினர் குழந்தையை வாங்க மறுத்துவிட்டனர். இதனால், தனியார் மருத்துவமனையிலிருந்து அந்தப் பிஞ்சு உடலைச் சென்ட்ரல் நாக்கா சுடுகாட்டு ஊழியர்களான தேவ்ராஜ் கெய்க்வாட் மற்றும் ராமேஷ்வர் சேபிள் ஆகியோரே மீட்டு எடுத்துச் சென்றனர்.

இறுதிச் சடங்கின் போது, குழந்தையின் தந்தை ஆட்டோவில் தனியாக வந்து 150 மீட்டர் தொலைவில் தள்ளி நின்றுகொண்டது அங்கிருந்தோரை உலுக்கியது. சுடுகாட்டு ஊழியர்கள் அவரைப் பலமுறை அருகில் அழைத்தும், அவர் தன் பிள்ளையின் உடலுக்கு அருகில் வர மறுத்துத் தூரத்திலிருந்தே சடங்குகளை முடிக்கக் கேட்டுக்கொண்டார். ஊழியர்களே குழந்தையை அடக்கம் செய்த பிறகு, அந்த தந்தை தூரத்திலிருந்தே கல்லறையின் மீது பாலை ஊற்றி, ஆவணங்களில் கையெழுத்திட்டுவிட்டுச் சென்றார். தினமும் மரணங்களைப் பார்க்கும் சுடுகாட்டு ஊழியர்களின் கண்களையே குளமாக்கிய இந்த அவலம், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in