LATEST NEWS
“அப்பா… இந்த டிரெஸ் உங்களுக்கு…” தந்தையுடன் பேசியபடியே சரிந்து விழுந்த மகன்… தீபாவளியைக் கொண்டாட வந்த இன்ஜினியரிங் மாணவன்.. பெற்றோர் கண்முன்னே பரிதாப மரணம்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஊருக்கு வந்த இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், பெற்றோர் கண்முன்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் வைரா பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் கின்னேரா கிருஷ்ணா என்பவரது மகனும், ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வந்தவருமான ராகவ் (20), பண்டிகை விடுமுறைக்காகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த துணி வியாபாரியிடம் அவரது தாய் துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அருகில் அமர்ந்திருந்த ராகவ் “அப்பா… இந்தச் சட்டைகள் உங்களுக்கு நன்றாக இருக்கும்” என்று தன் தந்தையிடம் கூறிய சில நொடிகளிலேயே திடீரென நிலைதடுமாறித் தரையில் சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்குச் சென்றடைந்ததும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதி செய்துள்ளனர். இளம் வயதில் மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் அவரது குடும்பத்தினரையும் மீளா துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
