CRIME
“குற்றவாளியின் வீட்டை இடிங்க..!” போர்வையால் சுற்றப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம்.. 23 வயது காமக்கொடூரனின் வெறிச்செயல்.. காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பைராகர் பகுதியில், துர்கா பூஜை திருவிழாக் கொண்டாட்டங்களின் போது காணாமல் போன 12 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பொதுமக்களின் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது திடீரெனக் காணாமல் போன அந்தச் சிறுமியின் உடல், அங்குள்ள கிருஷ்ணா காம்ப்ளக்ஸ் பின்புறம் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பழைய கட்டடத்திற்குள் போர்வையால் சுற்றப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டது. சிறுமிக்குக் கடுமையான பாலியல் வன்கொடுமை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுத்தப்பட்டு இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில், 23 வயதுடைய முகமது மொபின் என்ற வாலிபரைத் தப்பியோட முயன்ற போது காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும், அவரது வீட்டை இடிக்கக் கோரியும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பைராகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போபால் – சீகோர் நெடுஞ்சாலையைச் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மறித்துப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்
