பால்கனியில் குழி தோண்டி கல்லறை கட்டி… கணவனை உயிருடன் புதைக்க முயன்ற கொடூர மனைவி.. அடுத்து காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

CRIME

பால்கனியில் குழி தோண்டி கல்லறை கட்டி… கணவனை உயிருடன் புதைக்க முயன்ற கொடூர மனைவி.. அடுத்து காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!

Published

on

சொந்தக் கணவனை பால்கனியில் கட்டப்பட்ட தொட்டிக்குள் வைத்து உயிருடன் புதைக்க முயன்ற மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கனியில் செடிகள் வளர்ப்பதற்காக என்று கூறி, தனது கணவரிடமே கல்லறை போன்ற ஒரு கான்கிரீட் தொட்டியை அந்தப் பெண் கட்டச் சொல்லியுள்ளார். கணவனும் அதற்கேற்ப அந்தத் தொட்டியைக் கட்டிக் கொடுத்துள்ளார். தொட்டி கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பெண் தனது கணவருக்கு எதிராக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.

அதன்படி, கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் அவரைத் தாக்கி சுயநினைவிழந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த கணவனை, பால்கனியில் இருந்த அந்த கான்கிரீட் தொட்டிக்குள் வைத்து மூடியுள்ளார். தொடர்ந்து, இந்தச் செயலை மறைப்பதற்காக, வீட்டிற்கு சில தொழிலாளர்களை வரவழைத்த அந்தப் பெண், அந்தத் தொட்டியின் மேல் டைல்ஸ் பதித்து முழுமையாக மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

இருப்பினும், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு, பெண்ணின் நடத்தை மற்றும் அந்தத் தொட்டியின் அமைப்பைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் இது குறித்துக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தத் தொட்டியைத் திறந்து உள்ளே இருந்த கணவனை நல்வாய்ப்பாக மீட்டனர். உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in