“நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோமா” மனைவியின் கள்ளக்காதலை அறிந்து கணவன் செய்த காரியம்.. Facebook காதலால் உடைந்த 17 ஆண்டு பந்தம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

 “நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோமா” மனைவியின் கள்ளக்காதலை அறிந்து கணவன் செய்த காரியம்.. Facebook காதலால் உடைந்த 17 ஆண்டு பந்தம்..!!

Published

on

உத்தரப்பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபின் பரத்வாஜ் மற்றும் ரேகா பரத்வாஜ் தம்பதியினருக்குத் திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, பேஸ்புக் மூலம் ராகுல் உபாத்யாய் என்பவரைக் காதலிக்கத் தொடங்கிய ரேகா பரத்வாஜ், அவருடன் பழகி வந்துள்ளார்.

மனைவியின் இந்த கள்ளத்தொடர்பு குறித்து விபின் பரத்வாஜ் அறிந்தவுடன், அவர் எந்தவித தகராறிலும் ஈடுபடாமல் தனது மனைவி ரேகாவை ராகுல் உபாத்யாய்க்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலுக்காக 17 வருடத் தம்பதியினர் பிரிந்துள்ள இந்த விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in