“எனக்கு மென்டல் டார்ச்சர் தராங்க, என்ன பண்றதுனே தெரியல” – 10 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை… அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு மென்டல் டார்ச்சர் தராங்க, என்ன பண்றதுனே தெரியல” – 10 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை… அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த 27 வயதான சென்னையைச் சேர்ந்த பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டார். இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பின்தொடர்ந்து வந்த நிலையில், அவர் உயிரிழப்பதற்கு முன்பாக தனக்கு நேர்ந்த துயரங்கள் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில், வென்ச்சர் ஸ்டு ஜெமூரியா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜேசன் சாமுவேல் என்பவர், தனது நிதி ஆலோசனைகள் தவறானவை என மெட்டா நிறுவனத்திடம் இணையவழியாகப் புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதாகவும், தொடர்ந்து மாற்றுப் பக்கங்களைத் தொடங்கியபோதும் அவர்கள் புகாரளித்துத் தமக்கு மிகக் கடுமையான மன உளைச்சலையும் டார்ச்சரையும் கொடுத்ததாக ஹரிஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசியல்வாதிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களைத் தெரியும் எனக் கூறித் மிரட்டியதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையைத் தராவிட்டால் சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போது ஹரிஷின் தந்தை, தன் மகனைத் தற்கொலைக்குத் தூண்டிய ஜேசன் சாமுவேல் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, பங்குச் சந்தையில் நடக்கும் சில முரண்பாடுகளை ஹரிஷ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததால், இதன் பின்னணியில் வர்த்தக மாஃபியாக்களும் செல்வாக்கு மிக்கவர்களும் இருக்கலாமோ என்று சமூக வலைதளப் பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in