“அம்மாடியோ.. லாரிக்கும் பஸ்சுக்கும் நடுவே சிக்கிய பைக்..!” கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்த மறுஜென்மம்.. கேரளாவை உலுக்கிய விபத்து வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. லாரிக்கும் பஸ்சுக்கும் நடுவே சிக்கிய பைக்..!” கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்த மறுஜென்மம்.. கேரளாவை உலுக்கிய விபத்து வீடியோ..!!

Published

on

கேரள மாநிலம் கண்ணூரில், லாரி மற்றும் பேருந்துக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தனக்கு முன்னால் மெதுவாகச் சென்ற பேருந்தை, இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக முந்த முயன்றுள்ளார். அப்போது, வலது பக்க கண்ணாடியில் பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்று கவனிக்காமலும், கனரக வாகனங்களின் ஓட்டுநர்களுக்குத் தெரியாத மறைமுகப் பகுதியில் பயணித்ததாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பெல்ட்டை சரியாக மாட்டாததால், விபத்தின் போது ஹெல்மெட் கழன்று விழுந்துள்ளது.

https://twitter.com/motordave2/status/2112961366676177028?s=20

அதே நேரத்தில், வலது பக்கப் பாதையில் வந்த பேருந்தும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு இந்த விபத்தில் மறுஜென்மம் கிடைத்துள்ளது. பொதுவாக, பல கார் ஓட்டுநர்களும் வாகனங்களுக்கு இடையே முந்திச் செல்லும்போது இதுபோன்ற தவறுகளைச் செய்வதாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர். லேன் மாறும் போதும், முந்த முயலும் போதும் பக்கவாட்டுக் கண்ணாடிகளைச் சரிபார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in