சைபர் அட்டாக்..! 3,897 வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகள் கசிவு – வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதா..? வங்கி நிர்வாகத்தின் அதிரடி விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சைபர் அட்டாக்..! 3,897 வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகள் கசிவு – வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதா..? வங்கி நிர்வாகத்தின் அதிரடி விளக்கம்..!!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆவண தொகுப்பில் இருந்து 3,897 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருப்பதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த சைபர் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், செல்போன் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் உள்ளிட்ட முக்கியமான விபரங்கள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வங்கி கணக்குகளில் உள்ள நிதி அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக எஸ்பிஐ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இந்த சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் பண இருப்புக்கோ அல்லது வங்கி கணக்குகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினத்தந்தி செய்திப் பிரிவின்படி, இந்த சைபர் தாக்குதல் குறித்து எஸ்பிஐ விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், இதனால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலமாகத் தனித்தனியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் வங்கி நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in