இனி இந்தியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் தனித்தனி கலர் லைசென்ஸ்.. மத்திய அரசின் மாஸ் பிளான் – கார்டில் வரப்போகும் “அந்த 3 முக்கிய மாற்றங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி இந்தியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் தனித்தனி கலர் லைசென்ஸ்.. மத்திய அரசின் மாஸ் பிளான் – கார்டில் வரப்போகும் “அந்த 3 முக்கிய மாற்றங்கள்..!!

Published

on

மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வழங்கும் நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய வரைவு திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு என இனி தனித்தனி நிறங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது digital.

புதிதாக வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு லைசென்சும் லேமினேட் செய்யப்பட்ட படிவம் 7 அல்லது பி.வி.சி. (PVC) அட்டை வடிவில் மட்டுமே இருக்க வேண்டும் என இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அட்டைகளில் வாகன ஓட்டிகளின் ரத்த வகை, மொபைல் எண் மற்றும் அவசர கால தொடர்பு எண் ஆகியவை கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்பதும் விதியாக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினத்தந்தி செய்தியின்படி, லைசென்ஸ் வாங்குபவர்களின் வயது மற்றும் முகவரியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி இதற்கு ஆதாரமாகப் பிரமாண பத்திரங்கள் அல்லது ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மட்டுமே ஏற்கப்படும் என்றும், முன்பு நடைமுறையில் இருந்த நோட்டரி பத்திரம் போன்ற ஆவணங்கள் இனி தேவையில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in