LATEST NEWS
பக்தியின் உச்சக்கட்ட விபரீதம்..! நெஞ்சில் மண் கலசத்துடன் 9 நாள்கள் தண்ணீர் குடிக்காமல் விரதம்… சடங்கு முடிந்த மறுநாளே பெண் பரிதாப பலி..!!
பிஹார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாள்கள் கடுமையான விரதமிருந்த பெண் ஒருவர், சடங்குகள் முடிந்த மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தி என்ற பெயரில் உணவு மற்றும் தண்ணீரின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த அதீத விரத முறை, ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்தப் பெண், தனது நெஞ்சின் மீது பச்சரிசி மற்றும் நாணயங்கள் கொண்ட மண் கலசத்தை அப்படியே வைத்தவாறு 9 நாள்களும் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு தீவிர விரதத்தைக் கடைப்பிடித்துள்ளார். நவராத்திரி சடங்குகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த அடுத்த நாளே, அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தொடர்ந்து 9 நாள்கள் உடலுக்குத் தேவையான உணவு மற்றும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் குடிக்காமல் ஒரே இடத்தில் படுத்திருந்ததே இந்த விபரீதத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உடலில் கடும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்பட்டதாகவும், அதுவே அவரது இதயப் பாதிப்புக்கு வழிவகுத்து மரணத்தை ஏற்படுத்தியதாகவும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
