CINEMA
அடக்கடவுளே..! மொட்டை ராஜேந்திரன் இறந்துவிட்டாரா..? என்னாச்சு அவருக்கு…? மனவேதனையில் நடிகர்..!!
நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் தான் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்தியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் திடீரென பரவிய இந்தத் தவறான செய்தி, அவரது குடும்பத்தினரிடையேயும் ரசிகர்களடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வதந்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது சக நடிகரான ‘காதல்’ சுகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சக நடிகர் ஒருவரே மொட்டை ராஜேந்திரன் இறந்துவிட்டதாக இந்தத் தவறான தகவலைப் பரப்பினார் என்ற அதிர்ச்சித் தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேதனையடைந்த ராஜேந்திரன், “நான் நன்றாக, நலமாக இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட செய்திகளைப் போடுகிறார்கள்?” எனத் தன்னிடம் கூறி ஆதங்கப்பட்டதாகச் சுகுமார் தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் குறித்து இதுபோன்ற மரண வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல என்றாலும், சக கலைஞர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனத் திரைத்துறையினர் கருதுகின்றனர். தற்போது மொட்டை ராஜேந்திரன் ஆரோக்கியமாக உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும், ஆதாரமற்ற இது போன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
