அய்யோ கொடுமையே..! அடுத்த மாதம் புதுமனை புகுவிழா… அதற்குள் இப்படியா..? எலி காய்ச்சலால் பறிபோன 31 வயது இளைஞரின் உயிர்..! நெஞ்சை பிழியும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! அடுத்த மாதம் புதுமனை புகுவிழா… அதற்குள் இப்படியா..? எலி காய்ச்சலால் பறிபோன 31 வயது இளைஞரின் உயிர்..! நெஞ்சை பிழியும் சோகம்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்தவர் சுபின் (வயது 31). சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி சுபின் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட சுபினின் உடல்நிலை மோசமடைந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சுபினுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். புதிய வீடு ஒன்றையும் கட்டி வந்தார். அடுத்த மாதம் வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுபின் எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in