CRIME
“மகனை சுட்டுக்கொல்… இல்லையேல் நிர்வாணமாக நட..!” காதலை எதிர்த்து தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில், இளம் பெண் ஒருவருடனான காதலை எதிர்த்து, அந்த இளைஞன் மற்றும் அவரது தந்தையை ஆடையின்றி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர் 25 அன்று சர்சுனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசுந்தரா பார்க் பகுதியில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காதலைக் கண்டித்து இளைஞரையும், அவரது நண்பரையும் ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது தந்தையை அங்கு வரவழைத்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, “ஒன்று உன் மகனை சுட்டுக் கொல், இல்லையென்றால் அவனுடன் ஆடையின்றி வீதியில் நடந்து செல்” என்று கொடூரமான நிபந்தனை விதித்துக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த மிரட்டலுக்குப் பயந்து, அந்த இளைஞனும் அவரது தந்தையும் பொதுவெளியில் ஆடையின்றி அவமானப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கொல்கத்தா காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் உள்ளிட்ட மூன்று பேரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
