“ஆயுஷ்மான் கார்டை தூக்கி குப்பையில போடுங்க..!” கார்டு இருந்தும் ரூ.70,000 சொந்த காசு போச்சு.. ஹெல்ப்லைன் சொன்ன அதிர்ச்சி பதில்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வாலிபரின் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆயுஷ்மான் கார்டை தூக்கி குப்பையில போடுங்க..!” கார்டு இருந்தும் ரூ.70,000 சொந்த காசு போச்சு.. ஹெல்ப்லைன் சொன்ன அதிர்ச்சி பதில்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வாலிபரின் பகீர் வீடியோ..!!

Published

on

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் அதனை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போடும் அளவிற்கு அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ‘luitnova’ என்ற கணக்கைப் பயன்படுத்துபவர், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட குடல்வாலழற்சி மற்றும் மூல நோய் அறுவை சிகிச்சைக்கு இந்த ஆயுஷ்மான் அட்டை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் மருத்துவமனை கட்டணம் ரூ.55,000 மற்றும் மருந்துகள், பரிசோதனைகள், பயணச் செலவுகள் என மொத்தம் சுமார் ரூ.70,000 வரை தனது சொந்தப் பணத்திலிருந்து செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ஆயுஷ்மான் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த அட்டை அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா வகையான சிகிச்சைகளுக்கும் செல்லுபடியாகாது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. சில குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்றும், அவர் செய்துகொண்ட சிகிச்சைகள் கடந்த ஆண்டு வரை மட்டுமே காப்பீட்டுப் பட்டியலில் இருந்தன என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்துச் சிகிச்சைகளும் கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு, இந்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் விவாதத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in