CRIME
அடச்சீ… வேலை தருவதாகக் கூறி 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. 78 வயது பத்திரிகை அதிபரின் வெறிச்செயல்.. காமுகனுக்கு நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு..!!
போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை வரவழைத்து பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய முன்னாள் செய்தித்தாள் உரிமையாளரான 78 வயது பியாரே மியானுக்கு, போகோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆயுள் தண்டனைகளை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பியாரே மியானுக்கு ஆயுள் தண்டனையோடு சேர்த்து மொத்தம் 77.64 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழைச் சிறுமிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பண ஆசை காட்டி, அவர்களைத் தனது வலைக்குள் வீழ்த்தி இந்த கொடூரக் குற்றங்களை அவர் அரங்கேற்றியது அரசுத் தரப்பு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராகப் பதியப்பட்ட போகோ வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதியவர் என்றும் பாராமல் பியாரே மியானின் குற்றச் செயல்களுக்கு இந்த மிகக் கடுமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டனையை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோருக்குத் தக்க பாடம் புகட்டவும் இந்த அபராதத் தொகையும், தண்டனையும் உதவும் எனப் போபால் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
