ஹார்மோனியம் வாத்தியாரோடு கள்ளக்காதல்… எதிர்த்த மாமனாருக்கு நள்ளிரவில் மின்சார ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு மஞ்ச பூசி நாடகமாடிய மருமகள் சிக்கியது எப்படி..? – cinefeeds
Connect with us

CRIME

ஹார்மோனியம் வாத்தியாரோடு கள்ளக்காதல்… எதிர்த்த மாமனாருக்கு நள்ளிரவில் மின்சார ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு மஞ்ச பூசி நாடகமாடிய மருமகள் சிக்கியது எப்படி..?

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தில், மருமகள் தனது காதலனுடன் சேர்ந்து மாமனாரை மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஜனை குழுவில் பாடிவந்த 30 வயதான கீதா நிர்மல்கர் என்பவருக்கு, ஹார்மோனியம் கற்றுக்கொடுக்க வந்த லேக்ராம் நிஷாத் என்ற 25 வயது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களின் தொடர்பை கீதாவின் மாமனாரான மனோகர் நிர்மல்கர் (63) கடுமையாக எதிர்த்ததால், ஆத்திரமடைந்த காதலர்கள் இருவரும் கடந்த 2025 ஜூலை 16 நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனோகர் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொடூரமாகக் கொன்றுள்ளனர்.

கொலைக்கு பின்பு, மாமனார் மதுபோதையில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக கீதா நாடகமாடியதுடன், உடலில் இருந்த காயங்களை மறைக்க பிணத்தின் மீது மஞ்சளையும் பூசியுள்ளார். ஆதாயங்களை அழிக்க நினைத்த காதலன் லேக்ராம், உறவினர்கள் வருவதற்கு முன்பே அவசர அவசரமாக உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று எரிக்க முயன்றார். லேக்ராமின் இந்த அவசரம் கிராம மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் இறுதிச்சடங்கிற்கு முன்பு உடலின் துணியை மாற்றிப் பார்த்தபோது, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தீக்காயங்களும், மின்சாரம் பாய்ந்த அடையாளங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

போலீசார் நடத்திய பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மொபைல் போன் அழைப்பு விவரங்கள் மூலம் இந்த கொலைக் குற்றம் உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்றம் , கொலை நடந்து சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மருமகள் கீதா மற்றும் அவரது காதலன் லேக்ராம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in