CRIME
அடப்பாவிங்களா..! AI கொடுத்த ஐடியா: யூடியூபைக் மிஞ்சிய கொடூரம்.. வீட்டிலேயே போலி மது தயாரித்து 13 பேரை கொன்ற கும்பல்.. கொலை நடுங்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலேயே போலி மதுபானம் தயாரித்த திடுக்கிடும் உண்மையை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அஜய் ரத்தோர், AI உதவியுடன் மதுபானம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார். அதன்படி, இந்தூரில் உள்ள மருந்துக் கடையிலிருந்து ரசாயனங்களை வரவழைத்து, பழைய பாட்டில்களில் கெமிக்கல் மற்றும் தண்ணீரைக் கலந்து போலி மதுபானத்தைத் தயாரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதி பெற்ற அரசு மதுபானக் கடைகளின் போர்வையில், அசல் மதுபானப் பெட்டிகளுக்குள் இந்த கெமிக்கல் பாட்டில்களைக் கலந்து குற்றவாளிகள் விற்பனை செய்துள்ளனர். அக்டோபர் 2 முதல் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் 7 முதல் 12-ஆம் தேதிக்குள் கிராம மக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நச்சு மதுபான நெட்வொர்க்கில் தொடர்புடைய இதுவரை 10 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர், மேலும் ரசாயனம் விநியோகம் செய்யப்பட்ட இந்தூர் மருந்துக் கடை குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, விபரீதத்தை முன்கூட்டியே தடுக்கத் தவறிய தேவாஸ் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி (SP) ஆகியோரை மாநில அரசு உடனடியாக மாற்றியுள்ளது. மேலும், மாவட்ட கலால் வரித்துறை அதிகாரி வசந்தி பூரியா உட்பட மூன்று உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, மதுபான பாட்டில்கள் மற்றும் உடற்கூறுகள் தடயவியல் (FSL) ஆய்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
