LATEST NEWS
ChatGPT கொடுத்த மரண’ ஸ்கெட்ச்..! வலிப்பு மருந்தை நிறுத்தச் சொல்லி அட்டவணை… இளம்பெண் பலியால் கதறும் பெற்றோர்.. OpenAI நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி..!!
மென்பொருள் பொறியாளரான போவன் வான் (31) என்ற பெண், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் சாட்ஜிபிடி அளித்த தவறான பரிந்துரையைப் பின்பற்றித் தனது வலிப்பு நோய்க்கான மருந்தின் அளவைக் குறைத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சியாட்டிலைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளாகத் தினசரி 400 மில்லிகிராம் லாமோட்ரிஜின் மருந்தை உட்கொண்டு தனது வலிப்பு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், இந்த மருந்தால் ஏற்படும் லேசான பேச்சுத் தடுமாற்றம் தனது வேலை நேர்காணல்களைப் பாதிக்குமோ என்ற அச்சத்தில், மருந்தின் அளவைக் குறைப்பது குறித்து சாட்ஜிபிடி-யிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.
மருத்துவரை அணுகாமல் தானாகவே மருந்தைக் குறைத்துக் கொள்ளுமாறு தூண்டிய சாட்ஜிபிடி, சில வாரங்களுக்குள் மருந்தின் அளவை முற்றிலுமாக (பூஜ்ஜியமாக) குறைப்பதற்கான விரிவான கால அட்டவணையையும் வழங்கியுள்ளது. இதை நம்பி வான் தனது மருந்தின் அளவை 300 மி.கி, பின்னர் 200 மி.கி எனக் குறைத்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் கடுமையான வலிப்பு ஏற்பட்டுத் தனது குடியிருப்பில் உயிரிழந்து கிடந்தார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நோயைச் சமாளித்து வந்த தனது மகள், செயற்கை நுண்ணறிவின் தவறான வழிகாட்டுதலால் உயிரிழந்ததை அவரது சீனாவில் வசிக்கும் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தங்கள் மகளின் மரணத்திற்குச் சாட்ஜிபிடி வழங்கிய முறையற்ற வழிகாட்டுதலே காரணம் எனக் குற்றம் சாட்டி, அவளது பெற்றோர் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது தற்பொழுது வழக்குத் தொடர்ந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவின் முடிவுகளுக்காகத் தனது மகள் தன் உயிரையே விலையாகக் கொடுத்துள்ளதாகக் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம், மருத்துவத் தேவைகளுக்கு ஏஐ (AI) தொழில்நுட்பங்களை முழுமையாக நம்புவதிலுள்ள ஆபத்துக்களை உலகளவில் பெரும் விவாதமாக மாற்றியுள்ளது.
