“புருஷன் காணாமல் போய் 1 வருஷம் ஆச்சு..” கலெக்டர் ஆபீஸ் வாசலில் தரையில் படுத்துப் புரண்ட பெண்.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“புருஷன் காணாமல் போய் 1 வருஷம் ஆச்சு..” கலெக்டர் ஆபீஸ் வாசலில் தரையில் படுத்துப் புரண்ட பெண்.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பெண் ஒருவர் தார்ச் சாலையில் தரையில் படுத்துப் புரண்டு, தவழ்ந்தபடியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நீதி கேட்டு வந்த நெஞ்சை உலுக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டாகத் தனது கணவர் மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள அந்தப் பெண், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்தில் மாமியார் குடும்பத்தினர் பங்கு தர மறுப்பதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் வசிப்பதற்குக் கூட வீட்டில் சிறிதும் இடம் தராமல் கொடூரமாகப் பழிவாங்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துப் போராடியுள்ளார்.

சாலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அப்பெண் அழுதுகொண்டே தரையில் புரண்டு வந்த நூதனப் போராட்டம் அங்கிருந்த அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் அப்பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்டு, அவரது கணவர் மாயமானது குறித்தும் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் நில ஆக்கிரமிப்பு குறித்தும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in