CINEMA
“என் புருஷன் இப்படித்தான் இருக்கணும்” வருங்கால கணவர் குறித்து சாய் பல்லவி வெளியிட்ட சீக்ரெட் லிஸ்ட்.. பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்..!!
பாலிவுட்டின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கௌன் பனேகா குரோர்பதி’ (சீசன் 18) தீபாவளி சிறப்பு எபிசோடில் நடிகை சாய் பல்லவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய இந்நிழ்ச்சியில், சாய் பல்லவி தனது திரைத்துறை மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.அப்போது அமிதாப் பச்சன், சாய் பல்லவியிடம் அவரது வருங்கால கணவரிடம் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, தனது வருங்கால கணவர் முதலில் ஒரு நல்ல மனிதராகவும், சுயநலமில்லாதவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.அவர் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் குணம் கொண்டவராகவும், தனது செயல்களைத் தானே சரிபார்த்துக் கொள்ளும் முதிர்ச்சி உடையவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.வாழ்க்கையில் தான் இருக்கும் நிலையைப் பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு இருக்க வேண்டும் என்றும் சாய் பல்லவி கூறினார்.
மேலும், மனிதர்கள் தவறுகள் செய்வது இயல்பு, ஆனால் அந்தத் தவறுகளை ஒப்புக்கொண்டு அதைத் தானே சரிசெய்து கொள்ள வேண்டுமே தவிர, மற்றவர்கள் மீது பழி போடுபவராக இருக்கக் கூடாது என்றும் விளக்கினார்.இது ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு பட்டியல் இல்லை என்று சிரித்தபடி கூறிய அவர், கடைசியாக, வருங்கால கணவருக்கு சமைக்கவும் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தனது கூடுதல் விருப்பத்தையும் கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார்.
