அய்யோ கொடுமையே..! சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்.. தூங்கிய மனைவியின் முகத்தில் உரல் கல்லால் அடித்துக்கொன்ற கணவன்..! மைத்துனர் கொடுத்த மெட்டியால் நடந்த கொடூர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே..! சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்.. தூங்கிய மனைவியின் முகத்தில் உரல் கல்லால் அடித்துக்கொன்ற கணவன்..! மைத்துனர் கொடுத்த மெட்டியால் நடந்த கொடூர சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கார்வா சௌத் தினத்தன்று நடந்த ஒரு குடும்பத் தகராறு பெரும் கொலையில் முடிந்துள்ளது. ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ என்பவரின் மனைவியான மது, கடந்த 2010 ஆம் ஆண்டில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவராவார். இந்நிலையில், இவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் விழும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கார்வா சௌத் பண்டிகையின் போது, மதுவிற்கு அவரது மைத்துனர் (ஜேத்) காலில் அணியும் மெட்டி பரிசளித்துள்ளார். இந்த பரிசை வழங்கியது தொடர்பாகக் குடும்பத்தினரிடையே கடுமையான வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுள்ளது. மேலும், மதுவிற்கும் அவரது மைத்துனருக்கும் இடையே தவறான உறவு இருக்கலாம் என்ற சந்தேகம் கணவன் ஆனந்த் ஸ்ரீவாஸ்தவாவின் மனதில் ஆழமாக எழுந்துள்ளது.

Advertisement

இந்தச் சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மதுவின் முகத்தில் உரல் கல்லைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ படுகொலை செய்துள்ளார். காதலித்துத் கைப்பிடித்த மனைவியையே சந்தேகத்தின் பெயரில் கணவனே தீர்த்துக்கட்டியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in