பகீர்..! கூட்டுக்குடும்பத்திலிருந்து பிரிய மறுத்த கணவன்.. 5 வயது மகளின் கண்முன்னே மனைவி செய்த கொடூரம்… தடுக்க வந்த மைத்துனருக்கும் வெட்டு..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! கூட்டுக்குடும்பத்திலிருந்து பிரிய மறுத்த கணவன்.. 5 வயது மகளின் கண்முன்னே மனைவி செய்த கொடூரம்… தடுக்க வந்த மைத்துனருக்கும் வெட்டு..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில், கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வாழ மறுத்த கணவனை, 5 வயது மகளின் கண் முன்பாகவே மனைவியே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாமுரா மாவட்டத்தின் பர்ஜோரா காவல் எல்லைக்குட்பட்ட பகான்னா கிராமத்தைச் சேர்ந்த உஜ்வலா சக்ரவர்த்தி என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஜூமா சக்ரவர்த்தியைப் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான நாள் முதலே, ஜூமா தனது கணவரிடம் அவரது சகோதரர்கள் மற்றும் கூட்டுக்குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு உஜ்வலா மறுப்பு தெரிவித்து வந்ததால், இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜூமா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து உஜ்வலாவின் கழுத்தில் அடுத்தடுத்து வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து தடுக்க முயன்ற உஜ்வலாவின் மூத்த சகோதரர் சனத் சக்ரவர்த்தியையும் அவர் கோடாரியால் தாக்கியதில், அவருக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், உஜ்வலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்குக் காரணமான கோடாரியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in