மனிதநேயம் செத்துப்போச்சா..? சித்தப்பாவை பழிவாங்க 9 வயது அண்ணன் மகன் கடத்திக் கொலை… கரும்புத் தோட்டத்தில் வீசப்பட்ட சடலம்… 16 வயது சிறுவன் கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

மனிதநேயம் செத்துப்போச்சா..? சித்தப்பாவை பழிவாங்க 9 வயது அண்ணன் மகன் கடத்திக் கொலை… கரும்புத் தோட்டத்தில் வீசப்பட்ட சடலம்… 16 வயது சிறுவன் கைது..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், 9 வயது சிறுவன் கடத்தப்பட்டுப் பழிவாங்கலுக்காகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் அமன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி மாலை முதல் காணாமல் போன அச்சிறுமியின் சடலம், டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலை 58-க்கு அருகில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றிலிருந்து போலீசார் மீட்டனர்.

இக்கொலை வழக்குத் தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவனின் உறவினரான 16 வயது மதிக்கத்தக்க அர்மான் என்ற சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பழிவாங்கும் நோக்கோடே இக்கொலை அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. அர்மானும், உயிரிழந்த சிறுவனின் சித்தப்பா குல்ஷேரும் ஹரியானாவில் உள்ள ஒரு கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு அர்மான் திருடியபோது குல்ஷேர் அவரைப் பிடித்துக் கடை உரிமையாளரிடம் ஒப்படைத்ததோடு மட்டுமில்லாமல், அர்மானை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

தனக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கும் அடிக்கும் பழிவாங்கத் துடித்த அர்மான், முசாபர்நகருக்கு வந்து குல்ஷேரின் 9 வயது அண்ணன் மகனான அமனைக் கடத்திக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலைக் கரும்புத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் அர்மானைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, தற்போது அர்மான் சிறார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in