LATEST NEWS
“உத்தமர்களின் ஆட்சியில் பேரமா..? ராஜ்மோகன் விவகாரத்தில் TTV தினகரன் விளாசல்..!!
ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொண்ட உத்தமர்களின் ஆட்சியில் பேரம் பேசியது யார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்மோகன் பேசியதைச் சுட்டிக்காட்டி அவர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி தற்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்றும் TTV தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
