“பணிநீக்கம் மட்டும் போதாது.. வாங்கிய மொத்த சம்பளத்தையம்..” 16 வருடங்களாகப் போலி சான்றிதழில் டீச்சர் வேலை.. ஆசிரியையை அதிர வைத்த உத்தரவு..!! – cinefeeds
Connect with us

CRIME

“பணிநீக்கம் மட்டும் போதாது.. வாங்கிய மொத்த சம்பளத்தையம்..” 16 வருடங்களாகப் போலி சான்றிதழில் டீச்சர் வேலை.. ஆசிரியையை அதிர வைத்த உத்தரவு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், போலி சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி 16 ஆண்டுகளாகத் ஆசிரியர் பணியில் நீடித்து வந்த சுனைனா கவுர் என்ற பெண் ஆசிரியரின் பணி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது. அவர் சமர்ப்பித்திருந்த எஸ்டி சாதிச் சான்றிதழ் போலியானது என்பது துறை ரீதியான விசாரணையில் கடந்த 2026 ஜூலை மாதத்தில் உறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஆசிரியரைப் பணியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை பெற்றுக்கொண்ட முழு சம்பளத் தொகையையும் அவரிடமிருந்து முழுமையாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, சுனைனா கவுர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் பணிநீக்க விபரங்களை அரசின் மனிதவள மேம்பாட்டு இணையதளத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 16 ஆண்டுகள் போலி சான்றிதழில் அரசு சம்பளம் வாங்கிய இந்த ஆசிரியையின் விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in