ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்..! ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா..? மீண்டும் நடிக வரும் முதல்வர் விஜய்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்..! ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா..? மீண்டும் நடிக வரும் முதல்வர் விஜய்..?

Published

on

நடிகர் விஜய் மீண்டும் கேமரா முன்னால் வரவிருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், எச்.வினோத் இயக்கத்தில் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படமே தனது கடைசிப் படம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் அவரது திரைப்பயணம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விஜய் மீண்டும் நடிக்க மாட்டாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் முழுநீளத் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழக அரசு சார்ந்த ஒரு முக்கிய விளம்பரத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள இந்த அரசு விளம்பரத்தின் படப்பிடிப்பு, இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரான பிறகு விஜய் மீண்டும் கேமரா முன் தோன்றும் இந்த நிகழ்வு, அவரது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in