CRIME
காட்டிற்குள் கூட்டிச் சென்று உல்லாசம்.. அடுத்த நிமிடமே கள்ளக்காதலன் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அரங்கேறிய பயங்கரம்..!!
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை அருகே கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேகலா (24) என்ற இளம்பெண் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த மேகலா சென்றான்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில், அவருக்கும் துர்க பிரசாந்த் (28) என்ற இளைஞருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மேகலா வேறொரு நபருடனும் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் துர்க பிரசாந்த் அவரை எச்சரித்துள்ளார். மேகலா கேட்காததால் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட துர்க பிரசாந்த், நேற்று பென்னாலூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டுப் பகுதிக்கு அவரை உல்லாசமாக இருக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் தனிமையில் இருந்த பிறகு, துர்க பிரசாந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். சந்தேகத்தின் பேரில் துர்க பிரசாந்தைப் பிடித்து விசாரித்த காவல்துறையினரிடம் அவர் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். பென்னாலூர்பேட்டை போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
