செஞ்சியில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! பெட்டிக்கடைக்கு சென்ற 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி… பதற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செஞ்சியில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! பெட்டிக்கடைக்கு சென்ற 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி… பதற வைக்கும் பின்னணி..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அந்த சிறுமி கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிறுமியை கடத்த முயற்சித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டு அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த மர்ம நபர்கள் சிறுமியை சாலையிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 11-ந்தேதி ஆலம்பூண்டி அருகே தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா, அதிகாலையில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இன்றுடன் 30 நாட்கள் ஆகியும் மாயமான சிறுமி குறித்து எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் மீண்டும் ஜெயங்கொண்டான் கிராமத்தில் 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாக கூறப்படும் சம்பவம் செஞ்சி பகுதி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in