அநாகரிகத்தின் உச்சம்..! அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் மதுபாட்டில்களை ஏற்றி ரீல்ஸ்… போதை கும்பலின் அட்டூழியம்..! கைது செய்யுமா அரசு..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அநாகரிகத்தின் உச்சம்..! அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் மதுபாட்டில்களை ஏற்றி ரீல்ஸ்… போதை கும்பலின் அட்டூழியம்..! கைது செய்யுமா அரசு..?

Published

on

தேனி மாவட்டம் தேவாரம் அருகே அரசுப் பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடிக்கு பதிலாகக் காலி மதுபாட்டில்களை ஏற்றி, அதை ரீல்ஸ் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட போதை கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இத்துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளி மைதானத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தைப் பயன்படுத்திய சமூக விரோதிகள் சிலர், காலி மதுபாட்டில்களைக் கயிற்றில் கட்டி மேலே ஏற்றியுள்ளனர். மேலும், அதனை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து தங்களின் சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியது.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த கோம்பை காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொடிக்கம்பத்தில் இருந்த காலி மதுபாட்டில்களை அகற்றினர். மேலும், இணையத்தில் பரவிய சர்ச்சைக்குரிய அந்த ரீல்ஸ் வீடியோவையும் போலீசார் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசியக் கொடிக் கம்பத்தை அவமதிக்கும் வகையில் இந்த இழிவான செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in