டி.கே. சிவகுமாருக்கு ஏன் இன்னும் பதிலடி இல்லை..? வாடகைக் கால் கூட்டணி அரசு என்ன செய்கிறது..? முதல்வர் விஜயை நோக்கி எடப்பாடியின் காரசார கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டி.கே. சிவகுமாருக்கு ஏன் இன்னும் பதிலடி இல்லை..? வாடகைக் கால் கூட்டணி அரசு என்ன செய்கிறது..? முதல்வர் விஜயை நோக்கி எடப்பாடியின் காரசார கேள்வி..!!

Published

on

மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று கூறிய கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்குப் பதிலடி கொடுக்காமல் முதல்வர் விஜய் மவுனம் காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு, தமிழக அரசு அமைதி காப்பதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் நோக்கில் கர்நாடக அரசு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் நிலையில்,  வாடகைக் கால் கூட்டணி அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன செய்கிறது என்றும் EPS வினவியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்கான உரியப் பங்கு நீரைத் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக அரசின் போக்கைக் கண்டிக்காமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in