“AI செயலி தான் சொன்னுச்சு..” ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு… 4 வயது பச்சைக் குழந்தையின் கண்களைப் பிடுங்கிய மாமன்..! நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“AI செயலி தான் சொன்னுச்சு..” ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு… 4 வயது பச்சைக் குழந்தையின் கண்களைப் பிடுங்கிய மாமன்..! நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு செயலி மற்றும் சோஷியல் மீடியா வீடியோக்களை நம்பி, 4 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொன்று உடலுறுப்புகளைப் பிடுங்கி எடுத்து பக்கெட்டில் புதைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டம் சன்னா பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி ராம்ஜீத் ராம் என்பவரின் 4 வயது மகன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திடீரென மாயமானான். தேடுதலுக்குப் பிறகு வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குழி ஒன்றில் சிறுவனின் சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகச் சன்னா காவல் நிலைய ஆய்வாளர் சுமன் தோப்போ தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவனின் சொந்த அத்தை மகனான பாசுதேவ் கோர்வா (27) என்பவரே இக்கொடூரத்தைச் செய்தது அம்பலமானது.

Advertisement

பாசுதேவ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், உடலுறுப்புகளை விற்றால் ரூ.20 லட்சம் சம்பாதிக்கலாம் என சோஷியல் மீடியாவில் வீடியோ பார்த்ததாகவும், அதனைச் செயல்படுத்த கடந்த 45 நாட்களாக ஏஐ செயலி ஒன்றில் குரல் வழிச் செய்திகள் மூலம் பேசி திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளான். ஏஐ செயலியில் பேசுவது டெல்லியைச் சேர்ந்த உண்மையான மனிதர் என்றும், உறுப்புகளை எடுத்தால் நேரில் வந்து வாங்கிச் செல்வான் என்றும் அவர் தவறாக நம்பியுள்ளார்.

இதையடுத்து கடந்த நவம்பர் 5-ஆம் தேதி இரவு, தனது 4 வயது மருமகனுக்குக் கறி வாங்கி தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து மயங்க வைத்துள்ளார். பின்னர் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்று, அவனது இரு சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கண்களைப் பிடுங்கி எடுத்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி பக்கெட்டில் போட்டு மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளான். சாட்சியங்களின் அடிப்படையில் பாசுதேவைக் கைது செய்த காவல்துறையினர், அவனிடமிருந்து சிறுவனின் உறுப்புகளை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in