அடியாத்தி..! இது என்ன புது சோதனை..? தீபாவளிக்கு வச்ச ஸ்வீட்டை மொத்தமா மொய்த்த தேனீக்கள்.. பதறிபோன வியாபாரி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடியாத்தி..! இது என்ன புது சோதனை..? தீபாவளிக்கு வச்ச ஸ்வீட்டை மொத்தமா மொய்த்த தேனீக்கள்.. பதறிபோன வியாபாரி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த இனிப்பு ஸ்டால் ஒன்றில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் படையெடுத்து வந்து தின்பண்டங்களை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் நகரில் உள்ள மகாராஜா அகிரசௌக் அருகே ‘லவ்லி ஸ்வீட்ஸ்’ என்ற கடைக்குச் சொந்தமான தீபாவளி சிறப்பு தின்பண்ட ஸ்டால் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த நூற்றுக்கணக்கான தேனீக்களின் கூட்டம் ஸ்டாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரசகுல்லா மற்றும் பிற இனிப்புப் பண்டங்களை முற்றிலுமாக மொய்த்தது.

Advertisement

இனிப்பு மற்றும் சர்க்கரைப் பாகின் வாசனைக் கவர்ந்து வந்த தேனீக்கள் தட்டுகளை முற்றிலுமாக மூடிக்கொண்டதால் வாடிக்கையாளர்கள் யாரும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேனீக்களை விரட்ட முயன்ற கட ஊழியர்கள் 2 முதல் 3 பேருக்குக் கொட்டு விழுந்தது. இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால் சுமார் ரூ.1 லட்சம் வரை தின்பண்டங்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டதாகக் கடை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இனிப்புப் பண்டங்களை எப்போதும் மூடியே வைக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in