சிங்கிள்ஸ்க்கு ஜாக்பாட்..! 3 வருஷத்துல கல்யாணம் ஆகலையா..? கட்டிய 28,000 ரூபாயும் திரும்பக் கிடைக்கும்..! புதிய AI டேட்டிங் ஆப்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிங்கிள்ஸ்க்கு ஜாக்பாட்..! 3 வருஷத்துல கல்யாணம் ஆகலையா..? கட்டிய 28,000 ரூபாயும் திரும்பக் கிடைக்கும்..! புதிய AI டேட்டிங் ஆப்..!!

Published

on

திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வித்தியாசமான சலுகையை அறிவித்து சீனாவைச் சேர்ந்த புதிய டேட்டிங் செயலி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தியும் மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால், செலுத்திய உறுப்பினர் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. Liangpei AI என்று அழைக்கப்படும் இந்தச் செயலி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உதவுகிறது. இதன் ஆண்டு உறுப்பினர் கட்டணம் 2,000 சீன யுவான் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 28,000 ஆகும்.

இந்தச் செயலி எவ்வாறு செயல்படுகிறது என்றால், முதலில் பயனர்கள் AI உடன் சுமார் 20 நிமிடங்கள் உரையாட வேண்டும். அப்போது அவர்களின் குடும்பப் பின்னணி, கல்வி, வேலை, பழக்கவழக்கங்கள் மற்றும் திருமண எதிர்பார்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பிறகு பொருத்தமான வாழ்க்கைத் துணையை AI பரிந்துரைக்கும். இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே பேச முடியும், அடுத்த நபரைச் சந்திக்க விரும்பினால் தற்போதைய தொடர்பை முடிக்க வேண்டும். மேலும், திருமணமாகாதவர்கள் மட்டுமே பதிவு செய்யும் வகையில் கடுமையான அடையாளச் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

இந்த செயலியின் நிறுவனர் செங் சின்சுன் ஆவார். இவர் ஏஐ தேடுதல் தொழில்நுட்பமான Moonshot AI தலைவராக இருந்தவர். தற்பொழுது இந்த செயலி 35,000-க்கும் அதிகமான பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும், சுமார் 9 சதவீதம் பேர் கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in