LATEST NEWS
“தலையில் ஹெல்மெட்டுடன் சமைக்கிறோம்” எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் சென்னை அரசு குடியிருப்புகள்.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் மக்கள்.!!
சென்னை சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், உயிர்பயம் காரணமாகத் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே சமையல் செய்யும் அவல நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 1970-ஆம் ஆண்டு குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்காகக் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புகள் தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளன.
இந்தக் கட்டிடங்களின் மேற்கூரைகள் மற்றும் சுவர்களின் பகுதிகள் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான சூழல் நிலவுகிறது. இத்தகைய ஆபத்தான நிலையில் இருந்தபோதிலும், மாற்று இடமின்மை மற்றும் வாழ்வாதாரச் சூழல் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிப் பழுதடைந்துள்ள இந்தக் கட்டிடங்களால், அப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடனேயே கழித்து வருகின்றனர்.
