இதைப் பார்த்தா யாருக்கும் கண்கலங்கும்… இந்த வயதில் இப்படியொரு சோதனையா..? தாய், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த 3 வயது சிறுவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதைப் பார்த்தா யாருக்கும் கண்கலங்கும்… இந்த வயதில் இப்படியொரு சோதனையா..? தாய், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த 3 வயது சிறுவன்..!!

Published

on

ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள சௌபரான் தனுயா பள்ளத்தாக்குப் பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ராஜு பண்டிட் மற்றும் அவரது மனைவி சாவித்திரி தேவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தால் அவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோரை நிரந்தரமாக இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

பெற்றோரின் அரவணைப்பில் வளர வேண்டிய வயதில், அவர்களது மூன்று வயது மகனான சாவன் குமார் தனது பெற்றோருக்கு இறுதிச்சடங்குகளைச் செய்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

Advertisement

பால் மணம் மாறாத அந்தச் சிறுவன் இறுதிச்சடங்கு செய்யும் நெஞ்சை உலுக்கும் காட்சி காண்போரின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு இறைவன் வழங்கவும் அப்பகுதி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in