LATEST NEWS
“எல்லார் வீட்லயும் டிவி இருக்கு.. நீயும் ஒன்னு வாங்கிட்டு வா..” அடுத்தவங்க வீட்டுல டிவி பாத்த அம்மா… 3 மாசமா கஷ்டப்பட்டு மகன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… உருக வைக்கும் வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ‘ஹியூமன்ஸ் ஆஃப் மும்பை’ பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தச் செய்தி, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சேர்ந்த ஒரு ஏழை டெலிவரி பாய் மற்றும் அவரது தாயின் இதயத்தை உருக்கும் கதையைச் சொல்கிறது.
அந்தக் வாலிபர் தனது தாயின் ஆசையை நிறைவேற்ற கடும் உழைப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தாய் அடிக்கடி பக்கத்து வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சி பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மேலும், “எல்லார் வீடுகளிலும் டிவி இருக்கிறது, நீயும் ஒன்று வாங்கி வா” என்று தன் மகனிடம் சொல்லி வந்தார். தாயின் இந்த வார்த்தைகள் மகனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதால், இனி தன் தாய் டிவி பார்க்க வேறு எவர் வீட்டுக்கும் போகக்கூடாது என்று அவன் உறுதியாக முடிவெடுத்தான்.
https://www.instagram.com/reel/DezA4fctR_s/?utm_source=ig_web_button_share_sheet
மகன் தங்களுக்கென்று சொந்தமாக வண்டி இல்லாததால், வெயில் என்றும் மழை என்றும் பாராமல் தினமும் சைக்கிளிலேயே உணவுப் பொருட்களை டெலிவரி செய்து வந்தான். தன் அன்றாடச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்துக்கொண்டு, கடந்த மூன்று மாதங்களாகத் தினமும் 200 ரூபாயைச் சேர்த்து வைத்தார். இறுதியில் அந்தப் பணத்தைக் கொண்டு அவன் புதிதாக ஒரு டிவியை வாங்கி வீོட்டுக்குக் கொண்டு வந்தபோது, அதைப் பார்த்த தாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது; கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் தன் மகனை அணைத்துக்கொண்ட அந்தத் தருணம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
