CRIME
நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்..! இளைஞரின் 3 விரல்களைத் துண்டித்து… 700 தையல்கள் போடப்பட்ட அதிர்ச்சி… வாகனத்தை முந்தியதால் ஏற்பட்ட தகராறு..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ராஜ்குருநகர் பகுதியில், வாகனத்தை முந்திச் செல்வதில் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் காரணமாக ‘கொய்தா’ (Koyta) கும்பலைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சேர்ந்து சிவம் கர்மாரே என்ற இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தத் தாக்குதலில் இளைஞரின் தலை, முதுகு மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் பலமுறை வெட்டப்பட்டதில், அவரது மூன்று விரல்கள் துண்டானதுடன், ஒரு கை நிரந்தரமாகச் செயலிழந்த நிலையில், உடலில் சுமார் 700 தையல்கள் போடப்பட்டுள்ளன.
சிறிய விஷயங்களுக்குக் கூட ஆயுதங்களை எடுத்துத் தாக்கும் சிறுவர்கள் மற்றும் ரவுடி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
