“உளி, கத்தி, கம்புகளால் கொடூரத் தாக்குதல்..!” இளைஞரைத் தாக்கி வீட்டு வாசலிலேயே வீசிச் சென்ற கும்பல்.. வைரலாகும் பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உளி, கத்தி, கம்புகளால் கொடூரத் தாக்குதல்..!” இளைஞரைத் தாக்கி வீட்டு வாசலிலேயே வீசிச் சென்ற கும்பல்.. வைரலாகும் பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி, பழைய முன்விரோதம் காரணமாக 25 வயதான நிதின் என்ற இளைஞர் உளி, கத்தி மற்றும் கம்புகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலில் நிதின் சுயநினைவை இழந்த நிலையில், குற்றவாளிகள் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்து அவரது வீட்டின் வாசலிலேயே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கொடூரச் செயல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிதின், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றவாளிகளைக் கைது செய்யப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி ஆதாரங்கள் இருந்தபோதிலும் காவல்துறை காட்டும் மெத்தனப் போக்கு அப்பகுதியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in