“டேய் தம்பி நில்லுடா” புலிக்கே இந்த நிலைமையா..? கண்முன்னே வந்த கரடியைப் பார்த்து பதறி அடித்து ஓடிய புலி.. சுற்றுலாப் பயணிகள் எடுத்த திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டேய் தம்பி நில்லுடா” புலிக்கே இந்த நிலைமையா..? கண்முன்னே வந்த கரடியைப் பார்த்து பதறி அடித்து ஓடிய புலி.. சுற்றுலாப் பயணிகள் எடுத்த திகில் வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தின் மதாய் மண்டலத்தில், ஜங்கிள் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அரிய மற்றும் சுவாரசியமான காட்சி கிடைத்துள்ளது. அங்குள்ள மண் சாலையோரப் புற்களில் புலி ஒன்று மிகவும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு ஒரு கரடி வந்தது. தனது கண்முன்னே கரடியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த புலி, சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தது.

Advertisement

வழக்கமாக மற்ற விலங்குகளை வேட்டையாடும் புலி, கரடியைக் கண்டு பின்வாங்கிய இந்த அபூர்வ நிகழ்வைச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் கேமராக்களில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in